Tamil Poem Picks
Poems
கனவுகள்
கனவெல்லாம் நனவாகும் காலம் வரும்
கற்பனைகள் இலக்கியமாய் மாட்சி பெறும்
வெற்றிகளைக் குவிகின்ற திறமை வரும்
வேற்றுமைகள் கனைகின்ற வேளை வரும்
வானத்தை தொடுகின்ற வளர்ச்சி வரும்
வற்றாத ஊற்றினைபோல் ஆற்றல் வரும்
அறிவோடும் திருவோடும் உயர்வு வரும்
அகிலத்தில் புகழ்மிக்க வாழ்வு வரும்
கனவு
காணுங்கள்
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல ...
உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே லட்சிய கனவு
ஆம்! கனவு காணுங்கள்
- டாக்டர் அப்துல் கலாம்
|