The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

கவிதை

Image credit:unknown

கற்பனை வளத்துடனே - கருத்தை
கலந்துரைப்பது கவிதை
கற்பவர் உள்ளத்தினை - என்றும்
களிக்கச் செய்வது கவிதை

காலைக் கதிரவனின் - அழகை
காணச்செய்வது கவிதை
சோலைக் குயிலிசைபோல் - மனதைச்
சொக்கச் செய்வது கவிதை

எண்ணத்தின் எழுச்சிதனை - ஏட்டில்
எடுத்துரைப்பது கவிதை
தீந்தமிழ்ச் சொற்களினால் - அழகுறத்
தேர்ந்துரைப்பது கவிதை


ஏமாற்றங்கள்

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால்
ஏமாற்றங்கள் இல்லை